ஈரோடு கிழக்குத் தொகுதியை திமுகவுக்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ் முடிவு

1 mins read
35c04e73-3cbd-4335-b23f-1ac245deb61f
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தரப்பில் வலிமைமிக்க வேட்பாளர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்குப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. எனவே, அத்தொகுதியை திமுகவுக்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் புதல்வன் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றார்.

இந்நிலையில், தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் அவர் மரணமடைந்தார்.

இடைத்தேர்தலில் அத்தொகுதியைக் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியது.

அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.

ஆனால், இம்மாதம் 14ஆம் தேதியன்று இளங்கோவன் காலமானார்.

எனவே, ஆறு மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் இன்னொரு மகன் சஞ்சயைக் களமிறக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர்.

ஆனால் இடைத்தேர்தலில் போட்டியிட தமக்கு விருப்பமில்லை என்று சஞ்சய் கூறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அத்தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தரப்பில் வலிமைமிக்க வேட்பாளர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்குப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இந்நிலையில், இம்முறை அத்தொகுதியில் போட்டியிட திமுக விரும்புவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

எனவே, அத்தொகுதியை திமுகவுக்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ் முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்