59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்

59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்

2 mins read
7270ce50-bca7-45f7-bb1f-beac143fcf10
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் செ.ராஜேஷ்குமார் (இடது), பெ.விஸ்வநாதன். - படங்கள்: இந்து தமிழ் திசை
multi-img1 of 2
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை மேலும் 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், காங்கிரசைச் சேர்ந்த இரண்டு பேர் அதில் இடம்பெற்றுள்ளனர்.

ஏறக்குறைய 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளதை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் செ.ராஜேஷ்குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளதை ஆளுநர் மாளிகையான மக்கள் பவன் புதன்கிழமை (மே 20) உறுதி செய்தது. வியாழக்கிழமை காலையில் நடந்த பதவியேற்பு நிகழ்வில் அவர்கள் பதவியேற்றனர்.

அமைச்சர்கள் பட்டியல்

ஸ்ரீநாத் - (தூத்துக்குடி தொகுதி), எஸ்.கமலி (அவிநாசி), சி.விஜயலட்சுமி (குமாரபாளையம்), ஆர்.வி.ரஞ்சித் குமார் (காஞ்சிபுரம்), வினோத் (கும்பகோணம்) , ராஜீவி (திருவாடானை), பி.ராஜ்குமார் (கடலூர்), காந்திராஜ் (அரக்கோணம்), மதன்ராஜ்.பி (ஒட்டப்பிடாரம்), ஜெகதீஸ்வரி.கே (ராஜபாளையம்), ராஜேஷ்குமார்.எஸ் (கிள்ளியூர்), விஜய்பாலாஜி.எம் (ஈரோடு கிழக்கு), லோகேஷ் தமிழ்செல்வன்.டி (ராசிபுரம்), விஜய் தமிழன் பார்த்திபன்.ஏ (சேலம் தெற்கு), ரமேஷ் (திருவரங்கம்), பி.விஸ்வநாதன் (மேலூர்), குமார்.ஆர் (வேளச்சே)ரி, தென்னரசு.கே (திருப்பெரும்புதூர்), சம்பத்குமார்.வி, (கோவை வடக்கு), முகமது ஃபர்வாஸ்.ஜே (அறந்தாங்கி), சரத்குமார் (தாம்பரம்), மரிய வில்சன் (ராதாகிருஷ்ணன் நகர்), விக்னேஷ்.கே (கிணத்துக்கடவு).

காங்கிரசை அடுத்து விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர்களும் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களை அமைச்சரவையில் சேர்க்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

lமூன்று பேர் பெண்கள்

புதிதாக அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள 23 பேரில் மூன்று பேர் பெண்களாவர். அவிநாசி எம்எல்ஏ கமலி, குமாரபாளையம் எம்எல்ஏ விஜயலட்சுமி, ராஜபாளையம் எம்எல்ஏ ஜெகதீஸ்வரி ஆகியோர் பதவியேற்றனர். இதையடுத்து தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெண்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

முதல்வர் விஜய்யின் கல்லூரிக்கால நண்பர் ஸ்ரீநாத்தும் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்