தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேங்கைவயலில் சர்ச்சை பதாகை; காவல்துறை விசாரணை

1 mins read
413691cc-3f8e-40ae-afbe-8c387f34ac65
சர்ச்சைக்குரிய பதாகை. - படம்: ஊடகம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிக்கு அருகே வைக்கப்பட்டுள்ள பதாகை ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

வேங்கைவயல் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் அடையாளம் தெரியாத சிலர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனித மலத்தைக் கலந்துவிட்டனர்.

இது தொடர்பான வழக்கு குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். எனினும், இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், வேங்கைவயல் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு பதாகை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

அதில், “அசையா ஆமை, நகரா நத்தை, அத்தனையும் சொத்தை. வழக்கை தொடர்ந்து 100 ஆண்டுகள் நடத்த வாழ்த்துகிறோம். இப்படிக்கு வேங்கைவயல் மக்கள்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பதாகை குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்