பனங்கன்றுகள் வெட்டப்பட்டதால் சர்ச்சை; தவெகவுக்கு நெருக்கடி

1 mins read
d60bda1d-3a45-4255-8b94-9698b98de913
விஜய். - படம்: ஊடகம்

விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுத் திடலுக்கு அருகே உள்ள பனங்கன்றுகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி வெட்டப்பட்டதால் புது சர்ச்சை வெடித்துள்ளது.

விக்கிரவாண்டியில் தவெக மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில், அத்திடலுக்கு அருகே உள்ள பனங்கன்றுகளை மாநாட்டுக் குழுவினர் உரிய அனுமதி பெறாமல் வெட்டியுள்ளனர் என்றும் அக்கன்றுகளை நட்டு ஓராண்டு மட்டுமே ஆகிறது என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் பனங்கன்றுகளை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி தேவை. தவெக மாநாடு 85 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய திடலில் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது.

மொத்தம் 937 கம்பங்கள் நடப்பட்டு, ஒவ்வென்றிலும் 16 விளக்குகள் வீதம் 14,992 விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மாநாடு மேடை மட்டுமே 60 அடி அகலம், 170 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பணிகளுக்கு உரிய அனுமதியைப் பெற்ற தவெக நிர்வாகிகள் பனங்கன்றுகளை அகற்ற அனுமதி பெறவில்லை.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை மேற்கொள்ளும் எனத் தெரியவில்லை. ஏற்கெனவே இம்மாநாடு தொடர்பாக காவல்துறை பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், மாநாடு ரத்து செய்யப்பட்டு, 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இம்முறையும் சில கேள்விகளை காவல்துறை எழுப்பியதாக தகவல்கள் வெளியான நிலையில், புது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்