சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவிடம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார் வேலு. அப்போது அத்துறையில் ரூ.3.23 கோடிக்கு முறைகேடு நடந்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
லஞ்ச வழக்கை எதிர்கொண்டுள்ள அவரைக் கடந்த ஜூலை 3ஆம் தேதி நேரில் முன்னிலையாக லஞ்ச ஒழிப்புத் துறை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றார் எ.வ. வேலு. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அவர் தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையால் தேடப்படும் நபராக அவரை அறிவிக்க (லுக்-அவுட் நோட்டீஸ்) பிறப்பிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில், நெடுஞ்சாலைத்துறை முறைகேடு தொடர்பாக சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் நேரில் முன்னிலையானர் எ.வ. வேலு. அவரிடம் அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினர்.

