பயிர்க்கடன் தள்ளுபடி மீண்டும் ஏமாற்றம் அளிக்கிறது: விவசாயிகள்

பயிர்க்கடன் தள்ளுபடி மீண்டும் ஏமாற்றம் அளிக்கிறது: விவசாயிகள்

2 mins read
024239c1-603f-4166-bf18-c7f76ebdc2f3
கூட்டுறவு வங்கிகள் மூலம் தமிழக விவசாயிகள் பெற்றுள்ள ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். - படம்: த இந்து

தஞ்சாவூர்: தவெகவின் தேர்​தல் வாக்​குறு​தியின்​படி, பயிர்​க்கடன் தள்​ளு​படி வழங்க வேண்​டும் என அரசி​யல் கட்​சி​யினர், விவ​சா​யிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

கூட்டுறவு வங்கிகள் மூலம் தமிழக விவசாயிகள் பெற்றுள்ள ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் விஜய் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) அறிவித்தார். இதையடுத்து பல்வேறு தரப்புகளிடம் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.

“பயிர்க்​கடன் அறி​விப்பு கடல் நீரில் பெருங்​கா​யத்தைக் கரைப்​பது போன்ற செய​லாகும். தமிழக முதல்​வரின் கடன் தள்​ளு​படி அறி​விப்​பும் ஏமாற்​றும் வகை​யில் உள்​ளது. எனவே வாக்​குறு​திப்​படி கடன் முழு​மை​யும் தள்​ளு​படி செய்யவேண்​டும்,” என்று காவிரி டெல்டா பாசன விவ​சாய சங்​கங்​களின் கூட்​டமைப்புத் தலை​வர் கே.வி.இளங்​கீரன் கூறினார்.

“முழுமையாகத் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற கோரிக்​கையை வலி​யுறுத்தி சென்​னை​யில் மாநிலக் கூட்​டுறவுப் பதி​வாளர் அலு​வல​கம் முன்பு தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கம் சார்​பில் ஜூன் 22ஆம் தேதி தொடர் முழக்​கப் போராட்​டம் நடத்​தப்​படும்,” என்று தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்கப் பொதுச் செய​லா​ளர் சாமி.நட​ராஜன் தெரிவித்துள்ளார்.

“சிறு விவ​சா​யிகள் கூட்​டுறவு வங்​கி​களில் வாங்​கி​யுள்ள பயிர்க் கடன்​கள் முற்​றி​லு​மாகத் தள்​ளு​படி செய்​யப்பட வேண்​டும்,” என்று அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி கூறியுள்ளார்.

“தேர்​தலின்​போது கொடுத்த வாக்​குறு​தி​யின்​படி 5 ஏக்​கருக்​கும் குறை​வாக நிலம் வைத்​துள்​ளவர்​களின் பயிர்க்​கடனை முழு​மை​யாக ரத்து செய்​யாமல் ரூ.50,000, ரூ.75,000 எனக் கடன் வரம்பைக் கொஞ்​சம் கொஞ்​ச​மாக உயர்த்​து​வது கடும் கண்​டனத்​துக்​குரியது,” எனத் தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரிவித்துள்ளார்.

“கூட்​டுறவு வங்​கி​களில் சிறு விவ​சா​யிகள் வாங்​கிய கடன் அதிகமாக உள்ளது. அதை முழு​மை​யாகத் தள்​ளு​படி செய்​தால் மட்​டும்தான் அவர்​களுக்குப் பயன் கிட்டும்,” என்று பாமக தலை​வர் அன்​புமணி குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்