தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை

தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை

1 mins read
74ff9e8e-5690-4301-850e-0be07b3f7164
நம்பவர் 1ஆம் தேதி விடுமுறையை ஈடுகட்ட நவம்பர் 9ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. - கோப்புப் படம்: ஊடகம்

சென்னை:  தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 1ஆம் தேதியை பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “இவ்வாண்டு தீபாவளியை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடும் பொருட்டு, தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நவம்பர்1ஆம் தேதி அன்று ஒருநாள் மட்டும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

“அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 9ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது,” என்று அரசு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்