ஜனநாயகன் படத்தை கசியவிட்ட விவகாரம்: உதவி படத்தொகுப்பாளர் உட்பட மூவர் கைது

ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக இணையத்தளம், கேபிள் டிவியில் வெளியிட இடைக்காலத் தடை

ஜனநாயகன் படத்தை கசியவிட்ட விவகாரம்: உதவி படத்தொகுப்பாளர் உட்பட மூவர் கைது

படம்: சினி உலகம்

16 Apr 2026 - 9:32 pm

1 mins read

சென்னை: நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம், சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் கசிந்தது பிரச்சினையில் தொடர்புடைய மூவர் இணையக் குற்ற காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த வழக்கில் ஏற்கெனவே அறுவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உதவிப் படத்தொகுப்பாளராக வேலை பார்த்த ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் மூலமாகத்தான் படம் கசிந்திருப்பது தெரியவந்துள்ளது.

படத்தொகுப்பு செய்யப்படும் (எடிட்டிங்) ஸ்டுடியோவில் இருந்து எடுத்தே உதவி படத்தொகுப்பாளர் ஜனநாயகன் படத்தை திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

படக்குழு தரப்பில் இருந்தே ஜனநாயகன் திரைப்படம் கசிய விடப்பட்டது காவல்துறை விசாரணையில் அம்பலமானது.

ஹெச்.வினோத் இயக்கியிருந்த அந்த படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு காண இருந்த நிலையில் கடைசியில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியிட முடியாமல் போனது. இந்நிலையில், முழுப்படமும் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடப்பட்டு திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தளம், கேபிள் டிவிகளில் வெளியிட இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்