விருதுநகர்: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல், ஆட்சியில் உள்ள திமுகவுக்கு எதிரான போர் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அமமுக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரேயொரு காரணத்துக்காகவே அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாக கூறினார்.
“திமுக என்ற தீய சக்தி வீழ்த்தப்பட வேண்டும். எங்கள் கூட்டணியைப் பலப்படுத்தும் விதமாக, திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் உடன் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
“கூட்டணி என்று வந்துவிட்டால், தேர்தலின்போது 234 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். இதற்கேற்ப தொகுதிப் பங்கீடு நடைபெறும்,” என்றார் தினகரன்.