தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பக்தர்கள் போற்றுகிறார்கள், அற்பர்கள் கதறுகிறார்கள்: ஸ்டாலின்

1 mins read
9461ce6d-d39d-43ef-abd8-c9f2cf3431da
நாகை அருகே திருப்புகலூரில் அம்பாள்-அக்னீஸ்வரசாமி கோவிலில் ஜூன் 5ஆம் தேதி காலை குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. - படம்: ஊடகம்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதுவரை 3,000 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டிருப்பதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

நாகை அருகே திருப்புகலூரில் அம்பாள்-அக்னீஸ்வரசாமி கோவிலில் ஜூன் 5ஆம் தேதி காலை குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, திமுக அரசு இந்துக்களுக்கும் ஆன்மிகத்திற்கும் எதிரானது அல்ல என்றார்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் திமுக ஆட்சியில் கடந்த 1,491 நாள்களில் 3,000 திருக்கோவில்களில் குடமுழுக்குப் பெருவிழாக்கள் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியை பக்தர்கள் போற்றுகிறார்கள், அற்பர்கள் கதறுகிறார்கள். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்,” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்