தமிழகத்தில் மீண்டும் திமுக கூட்டணி ஆட்சி

தமிழகத்தில் மீண்டும் திமுக கூட்டணி ஆட்சி

2 mins read
பாஜகவின் செல்வாக்கும் தொடர்ந்து அதிகரிப்பு: இண்டியா டுடே - சி வோட்டர் கருத்துக் கணிப்பு
8c252f67-fbc5-4232-b0b3-877aa0f68163
தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 45 விழுக்காடு கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. - படம்: த ஹிந்து

மக்களவைத் தேர்தல் இப்போது நடந்தால் தமிழகத்தில் திமுக கூட்டணி 45 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 39க்கு 38 தொகுதிகளைக் கைப்பற்றும் என இண்டியா டுடே - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

இதன்மூலம், சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

இதில் தமிழகம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இண்டியா கூட்டணிக்கே ஆதரவு இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை, திமுக அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணியானது 38 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் அதிமுக கூட்டணி ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வாக்கு விழுக்காட்டை பொறுத்தவரை, தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 45 விழுக்காடும், அதிமுக தரப்புக்கு 33 விழுக்காடும் பிற கட்சிகளுக்கு 22 விழுக்காடும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியே வெல்லும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறிவந்தது. இப்போது தேர்தல் நடந்தால் அந்தக் கனவு நிச்சயமாகக் கைகூடும்.

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணிக்கு 182 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 2025ல் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்போது பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு 58 விழுக்காடாக இருந்தது. தற்போது நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி அவரது செல்வாக்கு 57 விழுக்காடாக நீடிப்பதாக இந்து தமிழ் திசை ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்