கம்யூனிஸ்டுகள் தயவில்தான் தவெக அரசு: முத்தரசன் எச்சரிக்கை

கம்யூனிஸ்டுகள் தயவில்தான் தவெக அரசு: முத்தரசன் எச்சரிக்கை

படம்: இந்து தமிழ் திசை

21 Sep 2026 - 7:08 pm

2 mins read

சென்னை: தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகளின் தயவால்தான் தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. முத்தரசன் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சட்டமன்றத்திலும் அதற்கு வெளியிலும் எழும் மக்கள் பிரச்சினைகளுக்குப் பதிலளிக்க வேண்டிய முதல்வர் விஜய்யும் அமைச்சர்களும் பிரச்சினைகளைத் திசைதிருப்பிப் பேசுவதில் எவ்விதப் பலனையும் தராது என்றார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கம்யூனிஸ்ட் கட்சிகள் அளிக்கும் ஆதரவின் முக்கியத்துவத்தை உணர்ந்து பேச வேண்டும் என்று குறிப்பிட்ட திரு முத்தரசன், சிபிஐ, சிபிஎம் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றால், தவெக அமைச்சரவையே கவிழ்ந்துவிடும் என்று எச்சரித்தார்.

கம்யூனிஸ்ட் தலைவர்கள் எப்போது ஆதரவை விலக்கிக் கொள்வார்கள் என்றுதான் தமிழக ஆளுநரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார் என்றார் திரு முத்தரசன்.

“அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா​வுக்கு எங்​கள்மீது ஏன் திடீரென கோபம் வந்​தது என்று தெரிய​வில்​லை. இடது​சாரிக் கட்​சிகளின் தயவால்தான் இந்த ஆட்சி நடந்து கொண்​டிருக்​கிறது. சட்​டமன்றத்தில் ஓர் உறுப்​பினர் கேள்வி எழுப்​பி​னால், அதற்கு முதல்​வரும் அமைச்​சர்​களும் நேரடியாகப் பதிலளிப்பதில்லை,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேபோன்ற தொனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகமும் தவெகவுக்கு அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த சில நாள்களாகத் தவெக தரப்புக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் எழுந்து வருகின்றன.

இதையடுத்து, தவெக ஆட்சிக்கு அளித்துவரும் தங்களது ஆதரவை விலக்கிக்கொள்வது குறித்து கம்யூனிஸ்ட் தலைவர்கள் பொதுவெளியில் பேசத் தொடங்கியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்