ஏழு வயதுச் சிறுமியைத் தாக்க வந்த நாய்கள்

1 mins read
34b1f5bb-947d-4430-90ca-7c2fbdb427a5
கும்பகோணம் ஆரோக்கியசாமி நகரைச் சேர்ந்த அஸ்லான பேகம் 7, தெருநாய்களின் தாக்குதலால் உடை கிழிந்தநிலையில் அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளார். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

கும்பகோணம்:  கும்பகோணத்தில் ஏழு வயதுச் சிறுமி தெரு நாய்களின் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளார்.

ஆரோக்கியசாமி நகரைச் சேர்ந்த அஸ்லான பேகம் தெருவில் நின்றுகொண்டிருந்தபோது, அவரை ஆறுக்கும் மேற்பட்ட நாய்கள் சூழ்ந்து, கடிக்க முயன்றன. சிறுமி அருகில் இருந்த வீட்டுக்குள் நுழைந்து தப்பினார். இதில், அந்தச் சிறுமியின் உடை கிழிந்தது.

அப்பகுதியில் அண்மைக்காலமாக சுற்றித்திரியும் 10க்கும் மேற்பட்ட நாய்கள், தெருவில் நிற்கும் குழந்தைகளை விரட்டிச் சென்று கடிக்க முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது. எனவே, அந்த நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள், இதுதொடர்பாக கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர்.

இந்தியாவில் தெருநாய் பிரச்சினை பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்