மதுரை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளின் வருகை 11% அதிகரிப்பு

மதுரை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளின் வருகை 11% அதிகரிப்பு

1 mins read
51348639-bcfe-47c6-a5f0-054391ccc6fe
மதுரை விமான நிலையம். - படம்: இந்து தமிழ் திசை

மதுரை: மதுரை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளின் வருகை கடந்த ஆண்டு ஆக அதிகமாக பதிவாகியுள்ளது. 2024ஆம் ஆண்டைவிட 2025ஆம் ஆண்டு உள்நாட்டு பயணிகளின் வருகை 11 விழுக்காடு அதிகரித்துள்ளது.

மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் விமானச் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் முக்கியமான விமான நிலையங்களில் மதுரையும் ஒன்று என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு அண்மையில் தெரிவித்திருந்தார்.

மதுரை விமான நிலையத்தை கடந்த 2018ஆம் ஆண்டு 12.5 லட்சம் பயணிகள் பயன்படுத்தி இருந்தனர். கடந்த 2025ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 12.2 லட்சமாக பதிவாகியுள்ளது.

மொத்தப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவானதும் 2018ல் தான். அந்த ஆண்டில் 15.8 லட்சம் பயணிகள் மதுரை விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை, 2025ல் 14.3 லட்சமாகப் பதிவாகியுள்ளது என்று மதுரை உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி குழுமத்தைச் சேர்ந்த முகமது முஸ்தபா தெரிவித்துள்ளார்.

பயணிகள் எண்ணிகை அதிகரித்து இருப்பதுடன் சரக்கு போக்குவரத்திலும் மதுரை விமான நிலையம் முத்திரை பதித்துள்ளதாக அவர் இந்து தமிழ் ஊடகத்திடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்