தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னையில் ரூ.14 கோடி போதைப்பொருள் சிக்கியது

1 mins read
143b21ed-b467-4a5b-8f53-59578d41374a
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள். - படம்: ஊடகம்

சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் எத்தியோப்பியாவில் இருந்து வந்த 35 வயது விமானப் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் ரூ.14 கோடி மதிக்கத்தக்க போதைப் பொருள்களைக் கைப்பற்றினர்.

கென்யா நாட்டைச் சேர்ந்த அந்தப் பெண் பயணி, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்து கொண்டதால் அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவரிடம் இருந்து ரூ.14 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பெண்ணைத் தடுத்து வைத்துள்ள சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்குப் பின் இந்தப் போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் யார் இருக்கின்றனர் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்