தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடுத்த வாரம் த.வெ.க. மாநாட்டிற்கான பூமி பூஜை

1 mins read
5ccc6152-adc8-4691-85ea-700f3dc7d900
நடிகர் விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த். - படம்: ஊடகம்

சென்னை: விக்கிரவாண்டி தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கான பூமி பூஜை அடுத்த வாரம் போடப்படும் என்று கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி கட்சிக் கொடியையும் கொடிப் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், வி.சாலையில் அக்டோபர் 27-ஆம் தேதி மாநில மாநாடு நடைபெறும் என்று தவெக தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதையொட்டி சனிக்கிழமை சென்னை தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய புஸ்ஸி ஆனந்த், “தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு பாஸ் எதுவும் கிடையாது. அனுமதி இலவசம். மாநாட்டில் விஜய் என்ன பேசவுள்ளார் என்பதை எதிர்பார்த்து அனைவரும் காத்துள்ளனர். இது விஜய்யின் குடும்பம்,” எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்