சென்னை: இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையம் விசாரணையைத் தொடரலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
“அந்த மனுவில், சூரியமூர்த்தி அதிமுகவைச் சேர்ந்தவர் அல்ல. தேர்தலில் வேறு கட்சியின் சார்பாக அதிமுக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டவர். அவருக்கு அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக மனு அளிக்கவோ, வழக்கு தொடுக்கவோ எந்த உரிமையும் கிடையாது,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
“மேலும், உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால், அதுகுறித்து சிவில் நீதிமன்றத்தில்தான் முறையிட வேண்டுமே தவிர, தேர்தல் ஆணையத்திடம் முறையிட முடியாது.
“எனவே சூரியமூர்த்தியின் மனுக்களை நிராகரிக்க வேண்டும்,” என எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டுள்ளது.