சென்னை: தமிழக கல்வித்துறை சார்பாக, ‘கற்றனைத் தூறும் அறிவு’ என்ற கருப்பொருளில் அமைந்த சிலைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கல்விச் சிலைகள் என்று குறிப்பிடப்படும் இச்சிலைகள், சென்னை மெரினா கடற்கரையில் நிறுவப்பட்டுள்ளன.
ரூ.1.43 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளை செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின், பின்னர் ‘கற்றனைத் தூறும் அறிவு! சாதனைச் சரித்திரம்’ என்ற நூலையும் வெளியிட்டார்.
மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் தவறாமல் இந்தப் புதிய கல்விச்சிலையைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். சிலை மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற சிலைகள் தமிழகத்தின் பாரம்பரிய சிற்பக் கலையின் பெருமைகளை எடுத்துக்கூறுவதாகவும் மாணவர்கள் மத்தியில் கல்வியின் முக்கித்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுவதாகவும் உள்ளதாக மேலும் சிலர் கூறியுள்ளனர்.

