தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இடைத்தேர்தல்: அதிமுக பிரமுகர் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார்

1 mins read
f374fc25-0394-457a-988f-ceb944a59589
வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளான திங்கட்கிழமை (ஜனவரி 20), செந்தில்முருகன் தமது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார். - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகர் செந்தில்முருகன் தமது வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றுள்ளார்.

அந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்திருந்த நிலையில், செந்தில்முருகன் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதனால், கட்சியின் உத்தரவை மீறி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததற்காக, அதிமுகவில் இருந்து செந்தில்முருகனை நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த நிலையில், வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளான திங்கட்கிழமை (ஜனவரி 20), செந்தில்முருகன் தமது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார்.

ஈரோடு அக்ரஹார வீதியைச் சோ்ந்த செந்தில்முருகன் ஈரோடு மாநகா் மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலாளராகப் பதவி வகித்தாா்.

இதே தொகுதியில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தோ்தலின்போது ஓ.பன்னீா்செல்வம் அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனுவைத் திரும்பப்பெற்ற செந்தில்முருகன், இடைத்தோ்தலுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்