தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு; விளக்கமளிக்க திமுகவுக்கு நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு; விளக்கமளிக்க திமுகவுக்கு நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்

22 Apr 2026 - 9:05 pm

1 mins read

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வாக்காளர்களுக்கு ரூ.8,000 ரொக்கச் சீட்டுகளை விநியோகித்ததாக திமுகவினர் மீது கடந்த வாரம் அதிமுகவினரும் பாஜகவினரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

அந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில், செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திமுகவினரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

பெரும்​பாலான தொகு​தி​களில் திமுக​வினர் ரூ. 8 ஆயிரத்​துக்​கான பற்றுச்சீட்டுகளை, தேர்​தல் நடத்தை விதி​களை மீறி சட்​ட​விரோத​மாக விநி​யோகித்து வரு​வ​தாகக் கூறி, அதி​முக வழக்​கறிஞரணித் துணைச் செய​லா​ள​ரான ஆர்​.ஏ.எஸ்​.செந்​தில்​வேல் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

அந்தப் புகாரில், “கோவை தெற்​கு, பர்​கூர், பாலக்​கோடு, அண்​ணாநகர், கும்​பகோணம் உள்​ளிட்ட பல்​வேறு தொகு​தி​களில் வாக்​காளர்​களை ஏமாற்​றும் வகை​யில் ரூ. 8 ஆயிரத்​துக்​கான பற்றுச் சீட்டுகளை வழங்கி தேர்​தல் நடத்தை விதி​மீறலில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

முதல்​வர் ஸ்டாலினின் புகைப்​படம் மற்​றும் வரிசை எண்​ணுடன் கூடிய இந்தச் சீட்டுகளை சில தொகு​தி​களில் வேட்​பாளர்​களே நேரடி​யாக வாக்​காளர்​களுக்கு விநி​யோகித்து வரு​கின்​றனர். இது தொடர்​பாக, ஆதா​ரங்​களு​டன் புகார் அளித்​தும் தேர்தல் ஆணை​யம் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

எனவே, சம்​பந்​தப்​பட்ட திமுக வேட்​பாளர்​கள் மீது நடவடிக்கை எடுக்​க​வும், விநி​யோகிக்​கப்​பட்ட பரிசுக் கூப்​பன்​களை பறி​முதல் செய்​ய​வும் தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும் எனக் கோரி​யிருந்​தார்.

குறிப்புச் சொற்கள்