தனிப் பெரும்பான்மை பெற இடைத்தேர்தல்: விஜய்யின் அரசியல் வியூகம்

தனிப் பெரும்பான்மை பெற இடைத்தேர்தல்: விஜய்யின் அரசியல் வியூகம்

2 mins read
8385f1a4-1f7f-4fd0-bc47-4282aa3df9ac
விஜய். - படம்: இந்தியா டுடே
Google News Preferred Icon

சென்னை: கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிகளைச் சமாளிக்கவும் தவெக அரசைத் தனிப் பெரும்பான்மையுடன் வலுப்படுத்தி, தனது நிர்வாகத்தைத் தொடரும் விதமாகவும் தமிழகத்தில் இடைத்தேர்தலை விரைவில் நடத்த முதல்வர் விஜய் திட்டமிடுவதாகத் தெரிகிறது.

இதற்கேற்ப அரசியல் சதுரங்கத்தில் அவர் காய்களை நகர்த்திவருவதாகத் தமிழக ஊடகச் செய்தி தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து, காங்கிரஸ், விசிக, இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் முஸ்லிம் லீக் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. இருப்பினும், தற்போது கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகள் தவெக தலைமைக்குப் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

விலைவாசி உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ள தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் போன்றவை அரசின் நிர்வாகத்தை முடக்கும் வகையில் அமைந்துள்ளன.

மேலும், ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த காங்கிரசும், பட்ஜெட் கூட்டத்தொடர், அரசின் முக்கியக் கொள்கை முடிவுகளில் தங்கள் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என விசிகவும் கொடுக்கும் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

கூட்டணிக் கட்சிகளின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக ஆட்சி நடத்த வேண்டும் எனில், தவெகவுக்குச் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் தேவை.

இதையடுத்து, சட்டமன்றத்தில் காலியாக உள்ள அனைத்து தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்துவதில் முதல்வர் விஜய் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

காலியாக உள்ள தொகுதிகளைக் கைப்பற்றுவதன் மூலம் கட்சியின் பலத்தை அதிகரிப்பதுடன், ஆட்சிக்குத் தேவையான தனிப் பெரும்பான்மையைப் பெற்று நிலையான ஆட்சியைத் தர முடியும் எனத் தவெக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்