தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு: 5.67 கோடி வாக்காளர்கள்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு: 5.67 கோடி வாக்காளர்கள்

3 mins read
0fa27b07-c8ed-4cfb-8e77-70b1f496f2aa
தமிழகத்தில் 5.67 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். - கோப்புப் படம்: த நியூஸ் மினிட் ஊடகம்

சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு, தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடி.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் 2025ல் தொடங்கியது.

இதற்காக, கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நடைபெற்றது.

இதன் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது.

2025 அக்டோபர் மாத நிலவரப்படி, 6.41 கோடியாக இருந்த வாக்காளர்களில் 74.07 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தற்போது, 5.67 கோடிப் பேர் மட்டுமே பட்டியலில் உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் செய்யவும் இம்மாதம் 10ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பெயர் சேர்க்க 22.8 லட்சம் மனுக்கள், பெயர் நீக்க 2 லட்சம் மனுக்கள், திருத்தம் செய்ய 9.90 லட்சம் மனுக்கள் என மொத்தம் 34.7 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன.

அவற்றைத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் பரிசீலித்து வாக்காளர் பட்டியலை இறுதி செய்துள்ளனர்.

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திங்கட்கிழமை அன்று (பிப்ரவரி 23) வாக்காளர் விவரங்களை வெளியிட்டார்.

அதன்படி, தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள்: 5,67,07,380. ஆண்கள்: 2,77,38,925, பெண்கள்: 2,89,60,838, மூன்றாம் பாலினத்தவர்: 7,617, நீக்கப்பட்ட வாக்காளர்கள் 74,07,207.

சென்னை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 28,30,936 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆண்கள் 13,65,763 பேர், பெண்கள் 14,64,344 பேர், மூன்றாம் பாலினத்தவர் 829 பேர் இடம்பெற்றுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில், 6 சட்டசபை தொகுதிகளில், ஆண் வாக்காளர்கள், 6,35,299, பெண் வாக்காளர்கள், 6,75,452, இதரர், 200, மொத்தம்: 13,10,951. நீக்கம் செய்யப்பட்டவர்கள், 1,43,321 பேர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் இளம் பகவத் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். மொத்தம் 13,76,624 வாக்காளர்கள் சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 14,97,417 வாக்காளர்கள் உள்ளனர்

சிவகங்கையில் ஆண் வாக்காளர்கள் -5,44,035, பெண் வாக்காளர்கள்- 5,66,526, மூன்றாம் பாலினத்தவர்கள்-38, மொத்த வாக்காளர்கள்-11,10,599.

சேலத்தில் ஆண் வாக்காளர்கள் - 13,70,962, பெண் வாக்காளர்கள்- 13,84,548, மூன்றாம் பாலினத்தவர்கள்-320, மொத்த வாக்காளர்கள்-27,55,830.

திருச்சியில் ஆண் வாக்காளர்கள் - 10,31,354, பெண் வாக்காளர்கள்- 10,94,642, மூன்றாம் பாலினத்தவர்கள்-307, மொத்த வாக்காளர்கள்-21,26,303.

கடலூரில் ஆண் வாக்காளர்கள் - 9,91,527, பெண் வாக்காளர்கள்- 10,23,979, மூன்றாம் பாலினத்தவர்கள்-293, மொத்த வாக்காளர்கள்-20,15,196.

செங்கல்பட்டில் ஆண் வாக்காளர்கள் - 11,04,511, பெண் வாக்காளர்கள்- 11,55,144, மூன்றாம் பாலினத்தவர்கள்-381, மொத்த வாக்காளர்கள்- 22,60,036.

கன்னியாகுமரியில் ஆண் வாக்காளர்கள் - 7,51,016, பெண் வாக்காளர்கள்- 7,59,390, மூன்றாம் பாலினத்தவர்கள்-144, மொத்த வாக்காளர்கள்- 15,10,550.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 7,29, 216, இதில் ஆண் வாக்காளர்கள் 3,60,493, பெண் வாக்காளர்கள் 3,68,676, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 47 பேர் இடம் பெற்றுள்ளனர்.

கோவையில் ஆண் வாக்காளர்கள் - 13,00,889, பெண் வாக்காளர்கள்- 13,95,396, மூன்றாம் பாலினத்தவர்கள்-528, மொத்த வாக்காளர்கள்- 26,96,813.

தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் - படம்: தினமணி இணையம்
குறிப்புச் சொற்கள்