சென்னையில் ‘எட்ஜ் ஏஐ’ மையம் தொடங்கியது எம்பெட்யூஆர் நிறுவனம்

சென்னையில் ‘எட்ஜ் ஏஐ’ மையம் தொடங்கியது எம்பெட்யூஆர் நிறுவனம்

1 mins read
cdd2270b-2553-4394-82dc-b5439048c8d6
தமிழகத்தில் ரூ.500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. - சித்திரிப்புப் படம்: இந்து தமிழ் திசை

சென்னை: உலக அளவில் ‘எட்ஜ் ஏஐ தளங்​கள்’ உரு​வாக்க​த்தில் தமிழகம் ஒரு முக்​கிய மைய​மாகத் திகழ்கிறது என ‘எம்​பெட்​யூஆர் சிஸ்​டம்​ஸ்’ தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் தலை​மைச் செயல் அதிகாரி ராஜேஷ் சுப்​ரமணி​யம், அமெரிக்​கா​வின் சிலிக்​கான் வேலியைத் தலைமையிட​மாகக் கொண்டு செயல்​பட்டு வரும் தனது நிறுவனம் தமிழகத்தில் ரூ.500 கோடி முதலீடு செய்யவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

“தமிழகத்தில் உள்ள சிறந்த தொழில்​நுட்​பத் திறமை, நிலை​யான கொள்​கை​யால் அடுத்​தகட்ட வளர்ச்​சி​யாக ‘மாடல்​நோ​வா’, ‘ஃபியூஷன் ஸ்டுடியோ’ ஆகிய மென்​பொருள்களை அறிமுகம் செய்​துள்ளோம். இதற்​காக சென்​னை​யில் 100 பொறியாளர்​கள் பணி​யாற்​றும் வகை​யில் ‘எட்ஜ் இன்​டெலிஜென்​ஸ்’ ஆய்வு மையத்தை எங்கள் நிறு​வனம் அமைத்​துள்​ளது,” என்றார் ராஜேஷ் சுப்​ரமணி​யம்.

தற்​போது இம்மையத்தில் 400 பொறி​யாளர்​கள் பணி​யாற்றி வரும் நிலை​யில், 2026க்​குள் இந்த எண்​ணிக்​கையை 550க்​கும் மேலாக உயர்த்​த தங்கள் நிறுவனம் திட்​ட​மிட்​டுள்​ளதாகக் குறிப்பிட்ட அவர், ஏஐ/எம்​எல், தரவியல் நிபுணர்​களுக்கு முன்னுரிமை அளிக்​கப்படும் என்றார்.

குறிப்புச் சொற்கள்