தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசு மருத்துவமனையில் மருத்துவரிடமே லஞ்சம் கேட்ட ஊழியர்கள்

2 mins read
eb14bae3-2ea6-4557-9895-56f289234f23
சென்னையில் அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் மருத்துவரிடமே ஊழியர்கள் லஞ்சம் கேட்ட சம்பவம் பரபரப்பேற்படுத்தியுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒரு மருத்துவரிடமே ஊழியர்கள் லஞ்சம் கேட்ட சம்பவம் பரபரப்பேற்படுத்தியது.

அந்த மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவராகப் பணியாற்றிய மருத்துவர் ஜெய்சன் பிலிப் என்பவர், கடந்த மார்ச் 14ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றலானார்.

மருத்துவர் ஜெய்சன் மாற்றலாகி சில மாதங்கள் ஆகியும் அவருடைய சேவைப் பதிவேடுகள் புதிய மருத்துவமனைக்கு அனுப்பப்படவில்லை. அதற்காகப் பலமுறை ராயப்பேட்டை மருத்துவமனைக்குச் சென்று அந்த மருத்துவர் கேட்டும் அந்த வேலை நடக்கவில்லை. அதற்காக அங்குள்ள ஊழியர்கள் தம்மிடம் லஞ்சம் கேட்பதாக அந்த மருத்துவர் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்​பாக மருத்​து​வர் ஜெய்​சன் பிலிப் தனது எக்ஸ் சமூக ஊடகத்தில், “எனது சேவைப் பதிவேடு உடனடி​யாக அனுப்​பப்பட வேண்​டும்.

“நான் தின​மும் கேட்டு வரு​கிறேன். ஆனால், ரூ.1,000, ரூ.2,000 லஞ்​சம் கேட்​கின்​றனர். முதல்​வரிடம் புகார் அளித்​தா​லும், லஞ்​சம் கொடுக்காமல் உங்​களு​டைய சேவைப் பதிவேட்டை அனுப்ப முடி​யாது எனக் கூறுகின்றனர். சுகா​தா​ரத்​துறை அமைச்​சர், செயலர் எனக்கு உதவ வேண்​டும்,” என்று தெரி​வித்​துள்​ளார். அரசு மருத்​து​வரின் இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. ஒரு மருத்துவருக்கே இந்த நிலையென்றால் சாதாரண ஏழை நோயாளிகள் எப்படி இங்கு மருத்துவம் பார்ப்பது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தப் புகார் குறித்து பேசிய சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், மருத்​து​வர் ஜெய்​சன் பிலிப்பை தொடர்புகொண்டு, உங்​களு​டைய பிரச்​சினை விதி முறை​களின்​படி உடனடி​யாகத் தீர்க்​கப்​படும் என்று உறுதி அளித்​துள்ளார்.

குறிப்புச் சொற்கள்