எதிரிகள் என்னை மிரட்டுகிறார்கள்: பெண் அமைச்சர்

எதிரிகள் என்னை மிரட்டுகிறார்கள்: பெண் அமைச்சர்

1 mins read
526bb299-688f-438f-b67f-4fcaf2a15ac9
அமைச்சர் ஜெகதீஸ்வரி. - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

விருதுநகர்: எதிரிகள் பலர் தம்மை மிரட்டுவதாக தமிழக சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை தமது உதவியாளரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மிரட்டல் விடுக்கப்படுவதாக அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

பெண் அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தவெக ஆதரவாளர்கள் மீது வீண் பழி சுமத்தி, கேலி, கிண்டல் செய்கிறார்கள். குறிப்பாக, எனக்கு ஏகப்பட்ட மிரட்டல்கள் வருகின்றன. என்னைச் செயல்படவிடாமல் மறைமுகமாக இடையூறு ஏற்படுத்துகிறார்கள்,” என்றார் அமைச்சர் ஜெகதீஸ்வரி.

தவெகவில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாத நிலையில் அவ்வாறு இருப்பதாகச் சித்திரிக்கப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், சிலர் வேண்டுமென்றே பிரச்சினைகளை உருவாக்கி தவெகவினர் மீது பழி போடுவதாகத் தெரிவித்தார்.

‘உங்களை மிரட்டுவது யார்?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, பெயர் சொல்லாமல் தான் மிரட்டல் வருகிறது என்றும் அண்மையில் தொடர்புகொண்டு பேசிய ஒருவர், தன்னுடைய இருசக்கர வாகனம் பழுதடைந்துவிட்டதாகவும் அதை எங்கே பழுது பார்க்கலாம் என்று தம்மிடம் கிண்டலாகக் கேட்டார் என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
தவெகஅமைச்சர்அரசியல்மிரட்டல்