சென்னை: சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பிரபல தொழிலதிபர் பிஷ்னோயின் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் இருவரது வீடுகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
சென்னை அடையாறு பகுதியில் வசிக்கும் மருத்துவர் இந்திரா வீட்டில் புதன்கிழமை (செப்டம்பர் 10) காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனை நடவடிக்கை, மாலை 7 மணி வரை நீடித்ததாகக் கூறப்படுகிறது.
மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள மேலும் இரண்டு இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. அனைத்து இடங்களிலும் துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் இச்சோதனை நடவடிக்கையை அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.