அதிமுக எம்எல்ஏக்களுக்குஏப்ரல் 23ல் தடபுடல் விருந்து: இபிஎஸ் ஏற்பாடு

1 mins read
7170f0b9-b328-4c06-a47d-d4d644885eb4
அதிமுக எம்எல்ஏக்களுக்கு தடபுடல் விருந்து அளிக்க எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்துள்ளார். - கோப்புப் படம்: ஊடகம்

சென்னை: சென்னையில் இம்மாதம் 23ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்தளிக்க ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தாண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது.

அண்மையில் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டணி குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையையும் முடித்து கூட்டணி அறிவிப்பையும் வெளியிட்ட பின்னரே டெல்லி சென்றார்.

இதையடுத்து தேர்தல் பணிகளில் அதிமுக - பாஜக கூட்டணி மும்முரமாக இறங்கியுள்ளது.

இதற்கிடையே அதிமுக கட்சி எம்எல்ஏக்களுக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்தளிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் ஏப்ரல். 23 ஆம் தேதி தடபுடலாக விருந்து வைக்கப்படும் எனத் தெரிகிறது.

தேர்தலுக்காக எம்எல்ஏக்கள் தீவிரமாக பணியாற்றவும் அந்தத் தொகுதிகளில் வெற்றி பெற வியூகங்களை சிறப்பாக வகுக்கவும் ஊக்குவிக்கும் பொருட்டு இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வருகிற மே 2 ஆம் தேதி அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்