தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெம்பக்கோட்டை அகழாய்வு: அணிகலன் தயாரிக்க உதவும் கற்கள் கண்டெடுப்பு

1 mins read
52a23e37-87e0-4198-8edc-0a4a310a6d76
அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட அணிகலன் தயாரிக்க உதவும் கற்கள். - படம்: தமிழக ஊடகம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேவுள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் தற்போது மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அகழாய்வில் 6,000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன் தயாரிக்கப் பயன்படும் கற்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

ஜாஸ்பர், சார்ட் என்ற இக்கற்களை நம் முன்னோர்கள், விலங்குகளை வேட்டையாடுவதற்கான கருவிகள் தயாரிப்புக்குப் பயன்படும் மூலப்பொருள்களாகவும் பயன்படுத்தியுள்ளதாக அகழாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

விஜயகரிசல்குளம் பகுதியில் ஏற்கெனவே இரண்டு கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் சுடுமண்ணாலான பகடைக்காய், முத்து மணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், சுடுமண்ணால் தயாரிக்கப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், பதக்கம், குடுவை, புகைக்கும் குழாய், கோடரி, பழங்கால பாசி மணிகள் உள்ளிட்ட 7,900க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பொருள்கள் அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்