பட்டாசு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் உயிரிழப்பு, ஒன்பது பேர் படுகாயம்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் உயிரிழப்பு, ஒன்பது பேர் படுகாயம்

1 mins read
fa00e7fe-7681-4568-9ac1-1dad34e2b2c0
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் திங்கட்கிழமை காலை வெடிவிபத்து ஏற்பட்டது. - படம்: ஏஎன்ஐ

விருதுநகர்: சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் திங்கட்கிழமை (ஏப்ரல் 13) காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்தபோது ஆலையில் 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்ததாகக் கூறப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு மணிநேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்த நிலையில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்தது.

மேலும், மூவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அது சொன்னது.

இந்த விபத்து குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அந்தப் பட்டாசு ஆலை, கண்ணன் என்பவருக்குச் சொந்தமானது என்றும் அதன் உரிமம் 2021ஆம் ஆண்டு முதல் புதுப்பிக்கப்படாமல் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, தமிழகப் பாஜக தலைவரும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரன், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

குறிப்புச் சொற்கள்