சென்னை: தமிழகத்தில் வசதி குறைந்த குடும்பங்கள், தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பித்து, தங்கள் குடும்ப அட்டையை, முன்னுரிமை குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என்று உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏறக்குறைய 2.20 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் ஐந்து வகையான அட்டைகள் உள்ளன.
வசதிகுறைந்த பலர், முன்னுரிமையற்ற அட்டை வைத்திருப்பதால், அவர்களுக்குக் குறைந்த அளவிலான பொருள்கள் மட்டுமே கிடைக்கின்றன. தங்கள் அட்டையை முன்னுரிமை குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்வதன் மூலம், அரசின் முழுமையான மானியப் பலன்களைப் பெற முடியும்.
இதன்மூலம் தகுதியான குடும்பங்கள் அரசின் நலத்திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுவதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார்.