முதல்வர் விஜய்யைச் சந்திக்க உத்தரப் பிரதேச ரசிகர் நடைப்பயணம்

முதல்வர் விஜய்யைச் சந்திக்க உத்தரப் பிரதேச ரசிகர் நடைப்பயணம்

1 mins read
ee5bb0ee-f36b-496c-8078-ac4b238bb24f
சந்திப்பிற்கான அனுமதி இல்லாதபோதும், திரு விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து கூற முடியும் என்ற நம்பிக்கையுடன் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார் ரசிகர் அமன். - படம்: என்டிடிவி

லக்னோ: தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் சி. ஜோசப் விஜய்யின் நிர்வாகத் திறமை, மக்கள் நலத் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட  அமன் என்ற தீவிர ரசிகர், அவரை நேரில் சந்திப்பதற்காக உத்தரப் பிரதேசத்திலிருந்து தமிழ்நாடு நோக்கி ஒரு நெடிய  நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார்.

தனது பயணம் முழுவதும் கையில் இந்தியத் தேசியக் கொடியை ஏந்தியவாறு பயணம் செய்யும் அமன், 24, ‘‘முதல்வர் விஜய்யின் சிறப்பான ஆட்சி முறை, மாநில வளர்ச்சிக்கான முயற்சிகள், எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள்மீது எனக்கு எல்லையற்ற நன்மதிப்பு உள்ளது. அந்த எண்ணத்தால் உந்தப்பட்டு இந்த லட்சியப் பயணத்தை மேற்கொண்டுள்ளேன்,’’ என்று தெரிவித்துள்ளார்.

திரைத்துறையிலிருந்து அரசியல் களத்திற்கு வந்து குறுகிய காலத்தில் ஆட்சி அமைத்துள்ள திரு விஜய்க்கு, நாட்டின் பிற மாநில இளையர்களிடமும் செல்வாக்கு பெருகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான முன்பதிவோ, சந்திப்பிற்கான அனுமதியோ இல்லாதபோதும், முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து கூற முடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் இந்த ரசிகர் பல நூறு கிலோமீட்டர் தூரப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்