திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) அப்பா- மகனுக்கிடையே நிலவிவந்த பிரச்சினையில் சுமுக முடிவு எட்டப்பட்டதாகப் பாமக கெளவரத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
கட்சிக்குள் நிலவிய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுவிட்டதாகவும், விரைவில் ராமதாசும் அன்புமணியும் ஒன்றாகச் சந்தித்து அடுத்தகட்டம் குறித்து பேசுவார்கள் என்றும் அவர் கூறினார்.
விழுப்புரத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் புதன்கிழமை (மே 21) அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“மூன்று நாள் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது.
“இருவரும் ஒன்றாகச் செய்தியாளர்களைச் சந்திப்பார்கள்,” என்றார் அவர்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வரும் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜி.கே.மணி தைலாபுரம் சென்றிருந்தார்.