தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆதித்த கரிகாலச் சோழன் கட்டிய கோவிலில் கிருஷ்ணதேவராயர் செப்பேடு கண்டெடுப்பு

1 mins read
de5cbad1-1ac9-4899-a809-26fc5c1beea4
மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள். - படம்: ஊடகம்

திருவள்ளூர்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அகழாய்வுப் பணிகள் மூலம் பல்வேறு அரிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மப்பேடு கிராமத்தில் ஆதித்த கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட சிங்கீஸ்வரர் கோவிலில் இருந்து அரிய செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணதேவராயர் காலத்தைச் சேர்ந்த அச்செப்பேடு அண்மைய ஆய்வின்போது கண்டெடுக்கப்பட்டதாக மத்திய தொல்லியல் துறையின் தென் மண்டலப் பிரிவு கல்வெட்டியல் துறை இயக்குநர் முனிரத்தினம் கூறியுள்ளார்.

“இந்தக் கோவிலில் பணிபுரிந்த பிராமணர்களுக்கு கிருஷ்ணதேவராயர், நிலத்தை தானமாக வழங்கிய தகவல் செப்பேட்டில் காணப்படுகிறது. இரண்டு செப்பு இதழ்கள் ஒரே வளையத்தில் கோக்கப்பட்டுள்ளன. அதில் கிருஷ்ணதேவராயரின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது.

“இந்தச் செப்பேட்டில் சமஸ்கிருத மொழியில் நந்தி நாகரி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த செப்பேடுகளின் முழு விவரங்களை அறிய விரைவில் அடுத்தகட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும்,” என்றார் முனிரத்தினம்.

குறிப்புச் சொற்கள்