மேட்டுக்காட்டு அகழாய்வில் சுடுமண் பானைகள், மூடிகள் கண்டெடுப்பு

1 mins read
0aa0e956-5c02-4ac4-baf7-486a31988fae
சுடுமண்ணால் ஆன பானைகளின் மூடிகள். - படம்: தமிழக ஊடகம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே மேட்டுக்காட்டில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் சுடுமண் பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

சுடுமண்ணால் ஆன இரு பானைகளும் அதன் மூடிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை 2,850க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்