தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை ராமாபுரத்தில் தீவிபத்து

1 mins read
9813d48a-be46-478e-857f-ead53380a99b
ராமாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்பு வீரர்கள், 8 தீயணைப்பு வாகனம் உட்பட 15 வாகனங்களுடன் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். - படம்: ஊடகம்

சென்னை: ராமாபுரத்தில் உள்ள பழைய பொருள்களை விற்பனை செய்யும் கடையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. அந்தத் தீ, பின்னர் அருகே இருந்த வாகன ஒக்கீட்டு நிறுவனம், மரச்சாமான்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கு என அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது.

தகவல் அறிந்து விருகம்பாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரைப் பாய்ச்சி அடித்துத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கரும் புகையுடன் கொழுந்துவிட்டுத் தீயெரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வட்டாரக் குடியிருப்புவாசிகள் வீடுகளை விட்டு வெளியேறிச் சாலைக்கு வந்தனர். பல இடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.

விருகம்பாக்கம், கோயம்பேடு, தி நகர், ஜெ.ஜெ. நகர் எனப் பல்வேறு பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு 2 மணி நேரத்துக்கு மேலாகத் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. பழைய பொருள்கள் விற்பனைக்கடை மற்றும் மரச்சாமான் கிடங்கு ஆகியவற்றில் இருந்த ஏராளமான பொருள்கள் தீக்கிரையாயின.

தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக ராமாபுரம், விருகம்பாக்கம், கோயம்பேடு, தி நகர், ஜெ.ஜெ நகர் உள்ளிட்ட பகுதியிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 8 தீயணைப்பு வாகனம் உட்பட 15 வாகனங்களுடன் போராடித் தீயை அணைத்தனர்.

இந்தத் தீ விபத்து குறித்து ராமாபுரம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்