நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஏறக்குறைய ஒரு கோடி முட்டைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இவை அனைத்தும் அனுப்பப்பட்டதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
மொத்தம் 21 குளிர்சாதன வசதி கொண்ட கொள்கலன்களில், ஒவ்வொன்றிலும் தலா 4.45 லட்சம் முட்டைகள் வீதம், அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த முட்டைகள், திட்டமிட்டபடி அமெரிக்கா சென்றடையும் என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய, அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, முதற்கட்டமாக ஒரு கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
வரும் நாள்களில் இந்த ஏற்றுமதி அளவு மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.