நீர்த்தேக்கம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு

2 mins read
1cdd17ed-d967-4172-a987-226ff09c4d12
ரூ.360 கோடி​யில் 1.6 டிஎம்சி வெள்ள நீரைச் சேமிக்​கும் வகை​யில், மாமல்​லன் நீர்த்​தேக்​கம் அமைய உள்​ளது. - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

சென்னை: செங்​கல்​பட்டு மாவட்​டம், நெம்​மேலி​யில் ரூ.360 கோடி​யில் நீர்த்​தேக்கம் அமைக்க திட்​டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தத் திட்டத்திற்கு மீனவர்​கள் எதிர்ப்புத் தெரி​வித்​துள்​ளனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், கிழக்குக் கடற்​கரைச் சாலை, பழைய மாமல்​லபுரம் சாலை ஆகிய​வற்​றுக்கு இடையே முட்​டுக்​காடு முகத்​து​வாரத்​தில் இருந்து மாமல்​லபுரம் வரை 3,010 ஏக்​கர் பரப்​பள​வில் ரூ.360 கோடி​யில் 1.6 டிஎம்சி வெள்ள நீரைச் சேமிக்​கும் வகை​யில் மாமல்​லன் நீர்த்​தேக்​கம் அமைய உள்​ளது.

இந்த நீர்த்​தேக்​கத்​திற்​கான அடிக்​கல் நாட்டு விழா, திங்கட்கிழமை (ஜனவரி 19) மாமல்​லபுரம் அருகே உள்ள நெம்​மேலி​யில் நடை​பெற்றது.

இதற்​கிடையே, “உப்​புநீர் சூழ்ந்த பகுதி, பக்​கிங்​காம் கால்​வாய் ஆகிய​வற்றை மாற்றி அமைப்​ப​தால் மீன்​களின் இனப்​பெருக்​கம் தடுக்​கப்​படும்.

“இயற்கைச் சூழல் மாற்​றம் ஏற்​பட்டு பாதிப்பு ஏற்​படும். கோவளம் முதல் கொக்​கில மேடு வரை (கிட்டத்தட்ட 35 கிலோமீட்டர்) இத்​திட்​டத்தை செயல்​படுத்​தும் போது, மீன்​பிடித் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்​படும்,” எனப் பல்​வேறு மீனவர் அமைப்​பு​கள் இத்​திட்​டத்​திற்கு எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன.

“மழை, புயல், வெள்​ளம் வரும் காலங்​களில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்​லாதபோது இந்த உபவடி நிலப் பரப்​பில் இறால், நண்டு, மீன் ஆகிய​வற்றைப் பிடித்து பிழைப்பை நடத்தி வரு​வ​தால் இத்​திட்​டத்​தினை மறு​பரிசீலனை செய்யவேண்டும்,” என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீனவர் அமைப்பு பிர​தி​நி​தி​களு​டன் சமா​தானக் கூட்​டம் ஒன்றும் திருப்​போரூர் ஊராட்சி ஒன்​றிய அலு​வல​கத்​தில் நடை​பெற்​றது.

செங்​கல்​பட்டு மாவட்ட ஆட்​சி​யர் தி.சினேகா தலை​மை​யில் நடை​பெற்ற இந்தக் கூட்​டத்​தில் அமைச்​சர் தா.மோ. அன்​பரசன் கலந்​துகொண்​டார்.

மீனவர்​களின் வாழ்​வா​தா​ரம் எந்த வகை​யிலும் பாதிக்​கப்​ப​டாது என்​றும், இந்தத் திட்​டத்​தினால், கடல் மீன்​களுக்​கும் எந்த வகை​யிலும் பாதிப்பு ஏற்​ப​டாது என்​றும் மீன்​வளத்​துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

குறிப்புச் சொற்கள்