சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள், விவிபாட் கருவிகள் 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் சீலிட்டு வைக்கப்பட்டுள்ளன.
மத்திய ஆயுதக் காவல் படையினர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், மாநில ஆயுதப் படை மற்றும் உள்ளூர் காவல்துறையினர் என நான்கு அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அந்தப் படைகளில் உள்ளோர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணிக்கை மையங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.
அரசியல் கட்சிகளின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே இருந்து கண்காணித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 18,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த இயந்திரங்கள் அனைத்தும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கும் என தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

