ஜி.கே.வாசன்: விஜய் வருகையால் அனைத்துக் கட்சிக்கும் பாதிப்பு

ஜி.கே.வாசன்: விஜய் வருகையால் அனைத்துக் கட்சிக்கும் பாதிப்பு

1 mins read
fa004658-4b08-49c3-891a-34dce0325575
ஜி.கே.வாசன். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

மதுரை: நடிகர் விஜய் வரவால் அனைத்துக் கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

தமாகா உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம், “சென்னையில் விமான சாகச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை. இதில் 5 பேர் இறந்ததற்கு மாநில அரசின் மெத்தனப் போக்கே காரணம். உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும்.

நடிகர் விஜய் தொடங்கிய கட்சியால், அனைத்துக் கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், ரேஷன்கடைகளில் தட்டுப்பாடின்றி பொருட்களை விநியோகிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு அருகே போதைப் பொருள்கள் விற்கப்படுவதைத் தடுக்க தனி காவற்படையை உருவாக்க வேண்டும்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்
தமிழ்நாடுஅரசியல்செய்தி