செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியைச் சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள், பாக்கு போதை வஸ்து உள்ளிட்ட பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

