விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்: அழைப்பு விடுத்த விஜய்

விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்: அழைப்பு விடுத்த விஜய்

1 mins read
c1bbb398-3cc1-4a40-b5b0-226e439fd068
விஜய். - படம்: மாலை மலர்

சென்னை: தமிழக மக்களின் பேரன்பும் பேராதரவும் மட்டுமே தம்மை இயக்கும் மாபெரும் உந்துசக்தி என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தன்னையும் தமிழக மக்களையும் உலகத்தில் உள்ள எந்த அதிகார, அராஜக சக்திகளாலும் பிரிக்க இயலாது என்றும் அவ்வாறு பிரிக்க நினைப்பவர்களை மக்கள் அக்குவேறு ஆணிவேறாகத் தனித்தனியாகப் பிரித்து, தூக்கி வீசியெறியப் போவது உறுதி என்றும் தொண்டர்களுக்கு எழுதிய கடிதமொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பணத்தை மட்டுமே நம்பி தத்தம் சுயலாபங்களுக்காக அரசியல் களமாடும், எதிர்வரும் நம் தலைமுறையின் கனவுகளை அடகு வைக்கத் துடிக்கும் அடிமை அரசியல் சூதாடிகளின் வேறு எந்தச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்தாலும், பிளவுவாத சக்திகளுக்கான மறைமுக அல்லது நேரடி ஆதரவாக மட்டுமே அது மாறும்,” என்று விஜய் கூறியுள்ளார்.

அரசியல் சூதாடிகள் ஊழல், லஞ்சக் கொள்ளைப் பணத்தை வழக்கம்போல் மழையாகப் பொழிந்தாலும் ஏப்ரல் 23ஆம் தேதியன்று தமிழக மக்கள் திருவிழாக்கோலம் பூண்டு, விசில் புரட்சிக்குத் தயாராக வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், குடும்பம் குடும்பமாகச் சென்று வாக்களிக்க வேண்டும் என்றும் எவ்வித மறுசிந்தனைக்கும் இடம்தராத ஒற்றைத் தேர்வாக விசில் சின்னம் மட்டுமே இருக்கவேண்டும் என்றும் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்