ஹஜ்ஜுப் பெருநாள்: ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

1 mins read
97d634df-deb2-4fc6-ae4f-984e7f337107
கோப்புப்படம்: - தமிழக ஊடகம்

சேலம்: மேட்டூர் அருகே நங்கவள்ளி சந்தையில் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ரூ.2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பகப்பட்டன.

நங்கவள்ளி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஆடு, மாடுகள் விற்பனை இடம்பெறும்.

இந்த நிலையில், ஜூன் 17ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள் என்பதால் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்டங்களிலிருந்து வணிகர்கள் ஆடு, மாடு கோழி உள்ளிட்ட கால்நடைகளை வாங்கவும் விற்கவும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) திரண்டனர்.

காலை 6 மணிக்குக் கூடிய சந்தைக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன.

இதில் 10 கிலோ எடை கொண்ட ஆடு, ரூ.10,000 முதல் ரூ.14,000 வரை விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ கொண்ட ஆட்டுக் கிடாய் ரூ.12,000 முதல் ரூ.18,000 வரை விலைபோனது.

ஆடுகளை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் வழக்கத்தைவிட ஆடுகளின் விலை ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை அதிகமாக இருந்ததாகக் கூறப்பட்டது.

சந்தை தொடங்கிய இரண்டு மணி நேரத்திலேயே ரூ.2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்