கடற்கரைப் பகுதிகளில் ஜூன் 14க்குள் குப்பைகளை அகற்ற பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

கடற்கரை சுற்றுச்சூழல் பாதிப்பு, நெகிழி கழிவுகள்

கடற்கரைப் பகுதிகளில் ஜூன் 14க்குள் குப்பைகளை அகற்ற பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

1 mins read
1c694dd8-a1b4-4dde-92b2-f9576d4c6392
சென்னையில் காசிமேடு முதல் எண்ணூா் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் நெகிழி, தொ்மக்கோல் உள்ளிட்ட ஆபத்தான குப்பைகள் சேர்ந்துள்ளன. - கோப்புப் படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
multi-img1 of 2

சென்னை: சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை, கடற்கரைப் பகுதிகளில் சேர்ந்துள்ள குப்பைகளை ஜூன் 14ஆம் தேதிக்குள் முழுமையாக அகற்ற மாநகராட்சி ஆணையர் தலைமையில் குழு அமைத்து, தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

சென்னை காசிமேட்டில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் 2,000 விசைப் படகுகள், 7,700 ‘ஃபைபர்’ படகுகள், 500 கட்டுமரங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடற்கரைப் பகுதிகளில் நெகிழிக் கழிவுகள் அதிகப்படியாக தேங்குவதால் கடல்வாழ் உயிரினங்களுடன் ஒட்டுமொத்தக் கடலோரச் சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பசுமைத் தீர்ப்பாயம் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியது.

கடற்கரைப் பகுதிகளில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் தெர்மகோல் பெட்டிகளைப் பயன்படுத்துவதைத் தடுத்து, அடையாறு, கூவம் ஆறுகளில் இவை கொட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்தியது குறித்து மாநகராட்சி ஆணையர் தலைமையிலான குழு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

குறிப்புச் சொற்கள்