சென்னை: உயர்நீதிமன்றங்களில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழை இந்தியாவின் பிறமாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும் என்றார்.
உலகின் ஆக தொன்மையான மொழி என்றால் அது தமிழ் மொழிதான் என்றும் தமிழ் மொழியின் இலக்கணமும் இலக்கியமும் பழமை வாய்ந்தவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“தமிழ் மொழி பல்வேறு பெருமைகளைக் கொண்டுள்ளது. எனவே பிற மாநிலங்களுக்கும் தமிழ் மொழியை பரப்புவது அவசியமாகிறது. மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழி ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்.
“தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளபடி, தமிழர்கள் கடந்த 4,500 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாட்டை அறிந்திருந்தனர் என்பது சரிதான்,” என்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.