தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொறியாளர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்த இந்து தமிழ் திசை

1 mins read
970a4d0c-3631-463f-911c-ba5fec14dbae
‘இந்து தமிழ் திசை’யின் ‘சீர்மிகு பொறியாளர் விருதுகள்’ வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆதரவாளர்கள், நடுவர்களுடன் இந்து தமிழ் திசையின் ஆசிரியர் கே.அசோகன் (வலமிருந்து இரண்டாவது), தலைமைச் செயல் அதிகாரி சங்கர் வி.சுப்ரமணியம் (வலக்கோடி). - படம்: இந்து தமிழ் இசை

சென்னை: ராம்கோ சூப்​பர்​கிரீட் சிமென்ட் வழங்​கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘சீர்​மிகு பொறி​யாளர் விருது’ வழங்​கும் விழா சென்னை​யில் நடைபெற்​றது.

கட்டு​மானத்​தி​லும், கட்டமைப்​பிலும் தனித்து​வத்​துட​ன் செயலாற்றி வரும் பொறி​யாளர்​களைச் சிறப்பிக்கும் வகையில் ராம்கோ சூப்​பர்​கிரீட் சிமென்ட் வழங்​கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘சீர்​மிகு பொறி​யாளர் விருது’, ‘வளர்​மிகு பொறி​யாளர் விருது’, ‘திறன்​மிகு பொறி​யாளர் விருது - 2024’ வழங்​கும் விழா சென்னை தி.நகரில் உள்ள வாணி மகாலில் நடைபெற்றது.

ரினா​கான் ஏ.ஏ.சி. ப்ளாக்ஸ், டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனப் பல்கலைக்​கழகம் ஆகியவை இணைந்து விருதுகளை வழங்​கின. 19 பேருக்குச் சீர்​மிகு பொறி​யாளர் விருது, 7 பேருக்கு திறன்​மிகு பொறி​யாளர் விருது, 36 பேருக்கு வளர்​மிகு பொறி​யாளர் விருது என மொத்தம் 62 பேருக்கு விருதுகள் வழங்​கப்​பட்டன.

‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் வரவேற்றுப் பேசும்​போது, ‘‘இந்து தமிழ் திசை சார்​பில் சிறந்த ஆசிரியர்​களுக்கு அன்பாசிரியர் விருது, அறிவியலில் சிறந்து விளங்​கும் குழந்தை​களுக்கு நாளைய விஞ்​ஞானி விருது, சிறந்து விளங்கும் பொறியாளர்களுக்கு சீர்மிகு பொறியாளர் விருது எனப் பலதரப்பட்ட துறைகளைச் சேர்ந்தோர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

இயற்கைப் பேரிடர்களையும் தாங்கி நிற்கும் உறுதியான கட்டுமானங்களை உருவாக்க புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று திரு அசோகன் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்