யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட வீடு இடிக்கப்பட்டது

யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட வீடு இடிக்கப்பட்டது

படம்: இந்திய ஊடகம்

17 Nov 2025 - 9:41 pm

1 mins read

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டாரத்தில் காட்டு யானைகள் ஊருக்குள் வந்து தொடர் தொல்லை ஏற்படுத்தி வருகின்றன. ஊருக்குள் வரும் காட்டு யானைகள் அங்கேயே முகாமிட்டு பொதுமக்களைத் தாக்குவது, பயிர்களைச் சேதப்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

அவற்றை வனத்துறையினர் உதவியால் பொதுமக்கள் வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சிலர் காட்டு யானை வழித்தடத்தில் வீடுகளைக் கட்டி ஆக்கிரமித்து வருகின்றனர். இவ்வாறு ஆக்கிரமித்துக் கட்டும் கட்டடங்களை அதிகாரிகள் இடித்து வருகின்றனர்.

இதற்கிடையே வாழைத்தோட்டம் பகுதியில் யானை வழித்தடத்தில் வீடு ஒன்று கட்டப்பட்டு இருந்தது.

நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாவட்ட நிர்வாகம் வீட்டின் உரிமையாளருக்கு ஏழு நாட்கள் கால அவகாசம் வழங்கியது. ஆனால், சம்பந்தப்பட்ட நபர், வீட்டை இடிக்காமலிருந்தார்.

இதையடுத்து, கூடலூர் வட்டார வளர்ச்சி அதிகாரி உள்ளிட்டோர் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டை வீட்டை ‘ஜேசிபி’ வாகனம் கொண்டு இடித்து அகற்றினர்.

குறிப்புச் சொற்கள்