தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
ஓபிஎஸ்ஸுக்குப் பாஜக அழைப்பு

அதிமுகவை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபடுகிறேன்: ஓபிஎஸ்

2 mins read
6b5f1520-4833-4808-86d4-13011a11c4b7
தென்காசி மாவட்டம் நெற்கட்டும் சேவலில் உள்ள பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். - படம்: ஊடகம்

சென்னை: அதிமுகவிலிருந்து பிரிந்திருக்கும் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரர் பூலித்தேவன் பிறந்த நாளையொட்டி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், தென்காசி மாவட்டம் நெற்கட்டும் சேவலில் உள்ள பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “விஜய் தற்போதுதான் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். தேர்தலில் நின்று வென்று இலக்கை எப்படி அடைகிறார், எவ்வாறு செயல்படுகிறார் என்பதையெல்லாம் பார்த்துவிட்டுப் பிறகுதான் சொல்ல முடியும்.

“இதுவரை யாரும் என்னுடன் கூட்டணி வைப்பதற்காகப் பேசவில்லை. எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்,” என்று தெரிவித்தார்.

“அதிமுக ஒன்றிணைய வேண்டும் என சசிகலா வெளியிட்ட அறிக்கையை நான் மனதார வரவேற்கிறேன். சசிகலாவுக்கு வலுசேர்க்கும் வகையில் அதிமுகவை ஒன்றிணைக்கும் பணியில் நான் ஈடுபட்டு வருகிறேன்,” என்று கூறினார்.

ஓபிஎஸ்ஸுக்குப் பாஜக அழைப்பு

பூலித்தேவரின் சிலைக்குப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாடாளுமன்றத் தேர்தலில் தொடங்கி, இன்றுவரை எங்களோடுதான் இருந்து வருகிறார்.

“தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறார். அவர் கூட்டணியில் தொடர்கிறார், சந்தேகமே வேண்டாம். ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என விரும்புகிறேன். அனைவரும் ஒன்றிணைந்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும். அதிமுக ஓரணியாக வேண்டும் என சசிகலா கூறியதை நானும் வலியுறுத்துகிறேன்,” என்றார் நயினார் நாகேந்திரன்.

குறிப்புச் சொற்கள்