தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தோழமைக் கட்சியாகக் கருதியே அதிமுகவை விமர்சிக்கிறேன்: திருமாவளவன்

2 mins read
284a3fdf-739b-48d5-bcb1-85d9d7b29831
திருமாவளவன் - படம்: ஊடகம்

சென்னை: அ​தி​முகவை தோழமைக் கட்​சி​யாக கருதுவதாகவும் அதனால்தான் அவர்​களது கூட்​டணி குறித்து தாம் விமர்​சிப்பதாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலை​வர் திருமாவளவன் தெரி​வித்​துள்​ளார்.

சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர், அதி​முக கூட்​ட​ணி​யில் இருந்து தாம் வெளி​யேறியபோது, ‘தம்பி திருமாவளவன் எங்​கிருந்​தா​லும் வாழ்​க’ என முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா தம்மை வாழ்த்​தியதாகக் குறிப்பிட்டார்.

“களத்​தில் நான் ஜெயலலிதாவின் தம்​பி​யாக பணி​யாற்​றியது அதி​முக தலை​வர்​களுக்குத் தெரி​யும். பாஜக​வால் அதி​முக​வுக்கு ஏற்​படும் பாதிப்பு குறித்து பழனிசாமி அறி​யாமல் இருக்​கிறார்.

“அதி​முக, பாஜக இடையே இணக்​க​மான உறவு ஏற்பட வேண்​டும் என நான் எங்​கே​யும் சொல்​ல​வில்​லை. அது என் ஆசை​யும் இல்லை. திரா​விட இயக்​க​மாக நாம் நம்​பிக் கொண்​டிருக்​கும் அதி​முக, பாஜக​வால் பாதிக்​கப்​பட​க் கூடாது, செல்​வாக்கை இழக்க கூடாது என்ற நல்​லெண்​ணத்தில் தான் விமர்சிக்கிறோம்.

“அதி​முக வலு​வாக இருந்​தால் பாஜக​வால் காலூன்ற முடி​யாது. பாஜக காலூன்​றி​னால் விசிக​வுக்​கோ, திரு​மாவளவனுக்​கோ பாதிப்பு என்ற எண்​ணம் அல்ல. “ஒட்​டு மொத்​த​மாக தமிழ் சமூகம் பாதிக்​கும் என்ற அச்​சம் இருக்​கிறது. அதி​முக மீது எனக்கு பகை உணர்ச்சியோ, வெறுப்பு உணர்ச்​சியோ இல்​லை,” என்றார் திருமாவளவன்.

பாமக, தேமு​திக ஆகியவை பாஜகவோடு இருந்​த​போது தாம் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், அதி​முகவை தோழமை இயக்​க​மாக கருது​வ​தால்தான் கூட்​டணி குறித்து விமர்சிக்க நேரிட்டது என்றும் தோழமை வேண்​டாம் என அதிமுக கரு​தி​னால் தாம் கருத்து தெரிவிக்க வாய்ப்பில்லை என்றும் திருமாவளன் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்