ஒழுங்கீனமாகத் தலைமுடி வைத்திருந்தால் மொட்டை: அமைச்சர் பேச்சு

ஒழுங்கீனமாகத் தலைமுடி வைத்திருந்தால் மொட்டை: அமைச்சர் பேச்சு

படம்: தினமலர்

03 Nov 2026 - 6:08 pm

1 mins read

விருதுநகர்: தலைமுடியை ஒழுக்கமாக திருத்திக்கொண்டு வராத அரசுப் பள்ளி மாணவர்களின் தலையை மொட்டையடிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

“விருதுநகர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் தலைமுடியை நல்ல முறையில் திருத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு வரும் மாணவர்களை மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும்,” என்று காரியாபட்டியில் நடைபெற்ற அரசுப் பள்ளி விழாவில் பங்கேற்றபோது அமைச்சர் குறிப்பிட்டார்.

“தலைமுடியை ஒழுங்கீனமாக வைத்திருப்பவர்களுக்கு மொட்டையடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அப்போதுதான் மாணவர்கள் சரியான பாதையில் செல்வார்கள்.

“மாணவர்கள் முழங்கால் வரை கால்சட்டை (பேன்ட்) அணிவதைப் பெற்றோர் அனுமதிக்கக்கூடாது. இந்த முதல் தவறே நம்மிடம் இருந்துதான் தொடங்குகிறது. தவறு செய்யும் மாணவர்கள் ஒரு கட்டத்தில் காவல் நிலையம் சென்று நிற்கும்போது, அவர்களின் தோற்றத்தைப் பார்த்தே காவல்துறை குற்றம் சுமத்தும் சூழல் உருவாகிறது. ஒருவரின் தோற்றம்தான் அவரது குணத்தைத் தீர்மானிக்கிறது,” என்றார் அமைச்சர் ஜெகதீஸ்வரி.

இதையடுத்து, அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் சமூக ஊடகங்களில் விவாதங்கள் தொடங்கியுள்ளன.

குறிப்புச் சொற்கள்