பாடத்​திட்டத்தில் வேற்று மொழி ஆக்கிரமிப்பு: நீதிபதி வெங்கடேஷ் கவலை

பாடத்​திட்டத்தில் வேற்று மொழி ஆக்கிரமிப்பு: நீதிபதி வெங்கடேஷ் கவலை

2 mins read
6c59661f-6c59-4614-a7a1-a783314e64f4
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ். - கோப்புப்படம்: தி இந்து
Google News Preferred Icon

சென்னை: பாடத்திட்டத்தில் வேற்று மொழிகளின் ஆதிக்கம் இருப்பதால், தமிழைக் கற்க வேண்டிய மாணவர்களிடையே தமிழ் மீதான தாக்கம் குறைந்து வருகிறது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கவலை தெரிவித்துள்ளார்.

தமிழ்மொழியைப் பேசுவதும், அதைப் பாதுகாப்பதும், அதன் அருமையைத் தூக்கிப் பிடிப்பதும் தமிழர்களாகிய நமது கடமை என்று நீதிபதி வெங்கடேஷ் கூறியுள்ளார்.

எந்தவொரு மொழியையும் தமிழன் எதிர்க்கவில்லை, பல மொழிகளைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவன். அதே வேளையில், என்மீது வேறொரு மொழியைத் திணித்தால் அதை ஒருபோதும் ஏற்கமாட்டேன் என்று உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

சீர்​மிகுசட்​டப் பள்ளியின் மாதிரி வழக்காடு மன்​றம், ராகேஷ் சட்ட அறக்கட்டளை இணைந்து நடத்தும் 3வது தேசிய குற்​ற​வியல் விசா​ரணை வழக்​குரைப் போட்டி சென்​னை​ டாக்​டர் அம்​பேத்​கர் சட்​டப் பல்​கலைக் கழகத்​தில் நடந்​தது. இதன் நிறைவு விழா​வில் நீதிபதி ஆனந்த் வெங்​கடேஷ் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, மனிதனின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் மொழியே முதல் இடத்தில் உள்ளது.

உலகில் 6,000 மொழிகள் பேசப்பட்டாலும் கிரேக்​கம், லத்​தீன், ஹீப்​ரு, தமிழ், சீனம், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளே 2,000 ஆண்டுகளைக் கடந்தவை. அதிலும் சில மொழிகள் இப்போது வழக்கில் இல்லை. ஆனால் 3,500 ஆண்​டு​களைத் தாண்டி நிற்​கும் ஒரே மொழி தமிழ் என்​பது கீழடி அகழாய்​வில் நிரூபணம் ஆகி​யுள்​ளது.

எந்த அரசனையோ, இறைவனையோ, மதத்​தையோ உயர்த்திப் பிடிக்​காத திருக்​குறளில், ஒவ்​வோர் அறக்​கூற்​றை​யும் நுட்​ப​மாகச் சொல்ல முடிந்​தது என்​றால் 2,000 ஆண்​டு முந்​தைய தமிழனின் வளர்ச்​சியை எண்​ணிப்பார்க்க வேண்​டும்.

அண்மையில், வெளி​யான ‘பராசக்​தி’ படத்தை மகனுடன் சென்று பார்த்​தேன். ‘தமிழகத்​தில் மொழிப் போராட்​டம் நடந்​தது தெரி​யு​மா’ என்று அவனிடம் கேட்​டதற்​கு, அவன் தெரி​யாது என்​றான். அதைச் சொல்​லித்தராமல் கடமை​யில் இருந்து தவறியதற்கு வேதனை அடைந்​தேன், மொழிப் போராட்டம் பற்றி அனை​வரும் கட்​டா​யம் தெரிந்திருக்க வேண்​டும்.

பாடத்திட்டத்தில் வேற்று மொழிகள் ஆக்கிரமிப்பு

பாடத்​திட்டத்தில் வேறு மொழிகள் ஆக்​கிரமிக்கத் தொடங்​கியதால், மாணவர்​களிடம் தமிழ் மீதான தாக்​கம் குறை​கிறது. தமிழன் எந்த மொழியை​யும் எதிர்க்​க​வில்​லை. மாறாக, விரும்பிப் படிக்​கிறான். என் தமிழ் மொழியின் தொன்​மை, செருக்கு காரணமாக, மற்​றவர்​கள் ஒரு மொழியை என் மீது திணித்​தால் ஒரு​போதும் அதை ஏற்​க​மாட்​டேன். மொழிக்கு இழுக்கு வரும்​போது, உங்​கள் குரல் உயர வேண்டும். தமிழ் மொழியைப் பேசுவதும், பாது​காப்​பதும், அதன் அருமையை தூக்​கிப் பிடிப்​பதும் நம் கடமை.

விழா​வில், உயர் நீதி​மன்ற நீதிபதி சுந்​தர் மோகன், முன்​னாள் நீதிபதி வி.​பார​தி​தாசன், ராகேஷ் சட்ட அறக்​கட்​டளைத் தலை​வர் என்​.ஆர்​.இளங்கோ, மூத்த வழக்​கறிஞர் எஸ்​.ஆர்​.​ராஜகோ​பால், மாதிரி வழக்​காடு மன்​றத்​தின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் வே.​பாலாஜி, பல்​கலைக்​கழக பதி​வாளர் கவுரி ரமேஷ் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

குறிப்புச் சொற்கள்